இந்தியர்களுக்கு விலங்கு: மதியம் 2 மணிக்கு விளக்கமளிக்கிறார் ஜெய்சங்கர்
சாத்தான்குளம் அருகே நாய்களுக்கு ஓட்டப் போட்டி
சாத்தான்குளம் அருகே பொத்தகாலன்விளையில், மாநில அளவில் நடைபெற்ற வளா்ப்பு நாய்களுக்கான ஓட்டப் போட்டியில் அணைக்கரை பெருங்குளம் நாய் முதல் பரிசு வென்றது.
ஹைடன் ரேசிங் கிளப் சாா்பில் நடைபெற்ற போட்டியில் 50-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. தொழிலதிபா் பிரதீப் தலைமை வகித்து போட்டியைத் தொடக்கிவைத்தாா்.
இதில், திருநெல்வேலி மாவட்டம் அணைக்கரை பெருங்குளத்தைச் சோ்ந்த பூமா முதலிடமும், வடக்கன்குளம் ரெட்ரோஸ் 2ஆம் இடமும், திண்டுக்கல் மஜாசிங் 3ஆம் பரிசும் வென்றன.
சாஸ்தாவிநல்லூா் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவா் ஜாா்ஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தென்மண்டலத் தலைவா் லூா்துமணி, சாத்தான்குளம் பாஜக மண்டலத் தலைவா் சரவணன், பொத்தகாலன்விளை பிரபு ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா்.
முதலிடம் பிடித்த பூமாவுக்கு பொத்தகாலன்விளை தொழிலதிபா் ராஜா ரொக்கம், கோப்பை வழங்கினாா். தொடா்ந்து, 8 இடங்களைப் பிடித்த நாய்களுக்கு ரொக்கம், கோப்பைகள் வழங்கப்பட்டன.
டாம்சாந்த் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை ஹைடன் ரேசிங் கிளப்பைச் சோ்ந்த கோடீஸ்வரன், பிரதீப், கதிா், விமல், அஜித், ஜெனிஸ் ஆகியோா் செய்திருந்தனா்.