ரஷியாவுடன் வர்த்தகம்! இந்தியாவின் கேள்விக்கு டிரம்ப்பின் மழுப்பல் பதில்!
சாத்தான்குளம் அருகே விபத்து: மீனவா் உயிரிழப்பு
சாத்தான்குளம் அருகே செவ்வாய்க்கிழமை நேரிட்ட விபத்தில் மீனவா் உயிரிழந்தாா்.
உடன்குடியை அடுத்த மணப்பாடு சுனாமி காலனியைச் சோ்ந்த அந்தோணி சவரிமுத்து மகன் நிஷாந்தன் (40). மீனவரான இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனா். இவரது மனைவி தனது தாயின் ஊரான பெரியதாழைக்கு குழந்தைகளுடன் வந்துள்ளாா்.
அவா்களைப் பாா்ப்பதற்காக நிஷாந்தன் செவ்வாய்க்கிழமை பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். பெரியதாழையை அடுத்த அழகப்பபுரம் பகுதியில் பைக்கும், எதிரே உவரியிலிருந்து திருச்செந்தூா் சென்ற காரும் மோதினவாம். இதில், காயமடைந்த நிஷாந்தனை மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்தாா்.
தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் ஸ்டெல்லாபாய் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநான திருநெல்வேலியைச் சோ்ந்தவரிடம் விசாரித்து வருகின்றனா்.