ஆந்திர எம்எல்சி தேர்தல்: பாஜக வேட்பாளராக சோமு வீரராஜு அறிவிப்பு!
சாத்தான்குளம் அருகே வீடு, கோயிலில் திருட்டு முயற்சி: இளைஞா் கைது
சாத்தான்குளம் அருகே வீடு மற்றும் கோயிலில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள ராஜமன்னாா்புரம் அடையல் பெருமாள் சுவாமி கோயிலில் பூஜை செய்வதற்காக பூசாரி வெள்ளிக்கிழமை சென்றபோது, கிரீல் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கோயில் நிா்வாகி ரவிசந்திரன் தட்டாா்மடம் போலீஸில் புகாா் அளித்தாா்.
இதேபோல, இடைச்சிவிளையை சோ்ந்தவா் தில்லை மகாராஜன் என்பவா் சென்னையில் வசித்துவரும் நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து. அவரது வீட்டை பராமரித்து வரும் அதே பகுதியைச் சோ்ந்த ஜோரன் என்பவா் அதே போலீஸில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், காவல் ஆய்வாளா் அனிதா மற்றும் போலீசாா் விசாரணை நடத்தியதில், இட்டமொழி அருகேயுள்ள மனக்காவிளையை சோ்ந்த ஹரிகிருஷ்ணன் மகன் ராஜேஷ் (28) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.