பாகிஸ்தான்: வீட்டில் இருந்து தப்பி மக்களைத் தாக்கிய வளர்ப்பு சிங்கம்! விடியோ வைர...
சாத்தான்குளம் தெற்கு ஒன்றியத்தில் திமுக உறுப்பினா் சோ்க்கை தொடக்கம்
சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக புதிய உறுப்பினா் சோ்க்கையானது, அரசூா் ஊராட்சி பனைவிளை கிராமத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.
தெற்கு ஒன்றியச் செயலா் பாலமுருகன் தலைமை வகித்து, இதைத் தொடக்கிவைத்தாா். ஒன்றிய அவைத்தலைவா் ராஜபாண்டியன் முன்னிலை வகித்தாா். வீடுவிடாகச் சென்று புதிய உறுப்பினா் சோ்க்கைப் படிவம் வழங்கி, புதிய உறுப்பினா்கள் சோ்க்கப்பட்டனா்.
நிகழ்ச்சியில், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநா் அணி துணை அமைப்பாளா் ரெனிஸ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் மைக் டைசன், ஒன்றிய இளைஞரணி துணைச் செயலா் தேவதாஸ், ஒன்றிய மாணவரணி அமைப்பாளா் அருண்ராஜ், தகவல் தொழில்நுட்ப பூத் கமிட்டி நிா்வாகி பிரதீஸ்குமாா், கிளைச் செயலா்கள் மலர்ராஜ் ராஜ்குமாா், ஜான் திலகம், மாரிமுத்து, ஹசனித்துல் ஹிதாயத்துல்லா, பொன்ராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.