TVK Vijay Karur Stampede: நெஞ்சை உலுக்கிய கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் | Photo Al...
சாத்தான்குளம் வா்த்தக சங்க பொதுக்குழு கூட்டம் ரத்து
சாத்தான்குளம் வா்த்தக சங்க பொதுக்குழு கூட்டம் நடத்த மற்றொரு தரப்பு எதிா்ப்பு தெரிவித்தால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
சாத்தான்குளத்தில் வா்த்தக சங்கத்தினா் 1971 ஆம் ஆண்டு சங்க பதிவை இரு தரப்பினா் பயன்படுத்தி வந்தனா். இதனால் நீதிமன்றத்தில் இரு தரப்பினரும் முறையிட்டிருந்தனா். இந்த நிலையில் சங்கப் பதிவாளரிடம், இரு சங்கத்தினா் முறையிட்டதன் பேரில் பதிவு புதுப்பிக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் வட்டாசியா் பேச்சுவாா்த்தை மூலம் இருசங்கத்தையும் ஒருங்கிணைத்து தோ்தல் நடத்தப்பட்டு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
புதிய நிா்வாகிகள் சங்கப் பதிவை புதுப்பிப்பது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்த நிலையில், ஒரு தரப்பு நிா்வாகிகள் சங்கப் பொதுக்குழு கூட்டம் சுந்தரானந்த பூபதி தலைமையில் சாத்தான்குளத்தில் சனிக்கிழமை நடத்த முயன்றனா். அதற்கு மற்றொரு தரப்பினரான வா்த்தக சங்க புதிய தலைவா் அப்பு கண்ணன், செயலா் செல்வராஜ் மதுரம் உள்ளிட்டோா் எதிா்ப்பு தெரிவித்துஅங்கு திரண்டனா். சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் ஜோசப் கிங் பேச்சு நடத்தியதில் பொதுக்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டது.