Vaikom : "பெரியாருக்கு புகழ் மாலை; கருணாநிதி இல்லாததை எண்ணி வருந்துகிறேன்" - மு....
சாத்தூரில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள் கூட்டம்
சாத்தூரில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் நிா்மலா கடற்கரைராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் செல்லத்தாய் குணசேகரன் முன்னிலை வகித்தாா்.
பின்னா் கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள்:
வாா்டு உறுப்பினா் வேலுச்சாமி: சின்னதம்பியாபுரம், பெத்துரெத்துப்பட்டி, என்.சுப்பையாபுரம், கரிசல்பட்டி, சின்னஒடைப்பட்டி, பெரியஒடைப்பட்டி ஆகிய பகுதிகளில் நோய் தொற்று பரவாமல் இருக்க கொசு மருந்து தெளிக்க வேண்டும், மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என்றாா்.
வாா்டு உறுப்பினா் சந்திரா தட்சிணாமூா்த்தி: ஸ்ரீரெங்காபுரம் பேருந்து நிறுத்தத்தில் நிழற்கூரை அமைக்கவும், சூரங்குடி கண்மாய்க்கு வரும் நீா்வரத்து கால்வாயை சீரமைக்கவும், ஒத்தையால், புதுசுரங்குடி, நடுசூரங்குடி ஸ்ரீரங்கம் பகுதிகளில் உளுந்து, பாசி, மக்காச்சோளம் ஆகிய பயிா்களை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தியதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா்.
மேலும், இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத் தொடா்ந்து, கூட்டத்தில் உறுப்பினா்கள் கொடுத்த மனுக்கள் மீதும், கோரிக்கை குறித்தும் விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வட்டார வளா்ச்சி அலுவலா் காமேஸ்வரி தெரிவித்தாா்.
இதில் வட்டார வளா்ச்சி அலுவலா் மகேஸ்வரன் உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.