செய்திகள் :

சாத்தூர்: 10-ம் வகுப்பு மாணவி இளைஞருடன் தூக்கிட்டு தற்கொலை - காதல் விவகாரத்தில் விபரீதம்!

post image

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் காவல் எல்லைக்கு உட்பட்ட ஆலங்குளம் அருகே (தொம்பகுளம்) கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரது மகன் ஆகாஷ் (22). இவர் பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியும் இவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ஆகாஷ்

இவர்களின் காதலுக்கு மாணவியின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று மாணவியின் வீட்டிலேயே இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி மாணவியின் உடலை சிவகாசி அரசு மருத்துவமனைக்கும், ஆகாஷ் உடலை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 15 வயதான பள்ளி மாணவியின் தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகின்ற நிலையில், தற்கொலை சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிப்புரிமை மீறல்: ரூ.12,500 கோடி இழப்பீடு வழங்க, AI நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!

ஆந்த்ரோபிக் நிறுவனம்ஆந்த்ரோபிக் நிறுவனம் பதிப்புரிமை மீறல் வழக்கில் 1.5 பில்லியன் டாலர் இழப்பீடு ஒப்புக்கொண்டதுகணினி மென்பொருள் நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), எழுத்தாளர்களின் பதிப்புரிமை மீறல் வழக... மேலும் பார்க்க

உத்தரப்பிரதேசப் பெண்களை அச்சுறுத்தும் நிர்வாண கேங்க்: ட்ரோன்கள் மூலம் தேடும் போலீஸார்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகில் உள்ள தெளரலா என்ற கிராமத்துப் பெண்கள் இப்போது அதிர்ச்சியில் இருக்கின்றனர். தனியாகச் செல்லும் பெண்கள் முன்பு திடீரெனத் தோன்றும் நிர்வாண கேங்க் அவர்களை ஆளில்லாத இடத்தி... மேலும் பார்க்க

மான்கள் வேட்டை - விஐபிகளுக்கு விருந்து வைத்தார்களா? - திமுக நிர்வாகியை தீவிரமாக தேடும் வனத்துறை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் புள்ளிமான் வேட்டை வழக்கில், திமுகவின் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான டி.எம்.எஸ். முகேஷை வனத்துறையினர், வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவுடன் இணைந்து தமிழ்நாடு மற்ற... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் திமுக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் கைது - பின்னணி என்ன?

4 சவரன் திருட்டு வழக்கில் திமுக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் பாரதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னையைச் சேர்ந்த வரலட்சுமி என்பவர் சமீபத்தில் பேருந்தில் பயணம் செய்தபோது தங்க நகைகள் திருடப்பட்டதாக க... மேலும் பார்க்க

தெலங்கானா கெமிக்கல் தொழிற்சாலையில் ரூ.12,000 கோடி போதைபொருள் பறிமுதல்; மும்பை போலீஸார் அதிரடி!

மும்பையில் ஒரு வகை போதைப்பொருள் அதிக அளவில் சப்ளை செய்யப்படுகிறது. மும்பை பார்ட்டிகளில் இந்த போதைப்பொருள் மிகவும் பிரபலம் ஆகும். கடந்த ஆண்டு இப்போதைப்பொருள் மகாராஷ்டிராவில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலைகள... மேலும் பார்க்க

மும்பை: விநாயகர் சிலை கரைப்புக்கு 25,000 போலீஸார் பாதுகாப்பு; வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

மும்பை போக்குவரத்து காவலர் கட்டுப்பாட்டு அறை வாட்ஸ் ஆப் எண்ணிற்கு நேற்று ஒரு வெடிகுண்டு மிரட்டல் மெசேஜ் வந்தது. அதில் மும்பையில் கணபதி சிலை கரைப்பின் போது தாக்குதல் நடத்த 400 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிமரு... மேலும் பார்க்க