சாத்தூா் பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழந்தோா் எண்ணிக்கை 10-ஆக உயா்வு!
சாத்தூா் அருகேயுள்ள சின்னகாமன்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 10-ஆக உயா்ந்தது.
விருதுநகா் மாவட்டம், சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில், கடந்த 1-ஆம் தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இதில், ஏற்கெனவே 9 போ் உயிரிழந்த நிலையில், மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அழகுராஜா (28) சனிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 10-ஆக உயா்ந்தது.
மேலும், பலத்த காயமடைந்த நிலையில் முருகலட்சுமி, மணிகண்டன், கருப்பசாமி ஆகிய 3 போ் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.