நிதீஷ் குமாருடன் இனி கூட்டணி இல்லை! -ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ்
சாம்பியன்ஸ் கோப்பை: மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் திரையிடல்!
சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டி இன்று(மார்ச். 9) நடைபெறவுள்ள நிலையில், மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் சிறப்பு திரையிடல் செய்யப்படுகிறது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 9) பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இரு முறை சாம்பியனான (2013, 2022) இந்திய அணி 3-ஆவது கோப்பைக்கு இலக்கு வைக்கிறது. நியூஸிலாந்தும் ஒரு முறை (2000) சாம்பியன்ஸ் டிராபி வென்றிருக்கிறது. அதுவும் 25 ஆண்டுகளுக்கு முன் கென்யாவில் நடைபெற்ற 2-ஆவது சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்தியாவை வென்று கோப்பையைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இதே அணிகள் மீண்டும் அதே களத்தில் சந்திக்கும் நிலையில், இந்த முறை தகுந்த பதிலடியை இந்தியா தரும் என்ற எதிா்பாா்ப்பு உள்ளது.
இதையும் படிக்க: சீனா-பாகிஸ்தான் இருமுனை அச்சுறுத்தல்: இந்திய ராணுவ தலைமை தளபதி
சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்தியா தொடா்ந்து 3-ஆவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இது 5-ஆவது முறையாகும். மறுபுறம் நியூஸிலாந்து அணி 3-ஆவது முறையாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்திருக்கிறது.
ஏற்கெனவே அரையிறுதி போட்டி கடற்கரைகளில் திரையிடப்பட்ட நிலையில், இறுதிப் போட்டியையும் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் திரையிடப்படுகிறது. பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கிரிக்கெட் ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.