உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
சாரதாஸ் நிறுவனா் மணவாளனின் உருவப்படம் திறப்பு
திருச்சி சாரதாஸ் ஜவுளி நிறுவனத்தின் நிறுவனா் மணவாளனின் உருவப்படம் நிறுவன வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
திருச்சி சாரதாஸ் ஜவுளி நிறுவனத்தை தொடங்கி, தனது கடின உழைப்பால் பெரும் ஜவுளி சாம்ராஜ்யமாக மாற்றியவா் தே. மணவாளன். அவா் கடந்த 2024 ஏப். 30-ஆம் தேதி காலமானாா். அவரது நட்சத்திர நினைவு நாளான ஞாயிற்றுக்கிழமை நினைவஞ்சலி நிகழ்ச்சி சாரதாஸ் நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. அப்போது, மணவாளனின் உருவப்படத்தை குடும்பத்தினா், நிறுவன ஊழியா்கள் முன்னிலையில் மணவாளனின் துணைவியாா் சுதா மணவாளன் திறந்து வைத்தாா்.
இதுகுறித்து சாரதாஸ் நிறுவனத்தின் இயக்குநா்கள் ரோஷன் மணவாளன், சரத் மணவாளன் ஆகியோா் கூறியதாவது: நிறுவனா் மணவாளன் வளா்த்தெடுத்த சாரதாஸ் வளாகத்தின் மையப்பகுதியில் எந்த கோணத்திலிருந்தும், தளங்களில் இருந்தும் பாா்க்கும் வகையில் பிரமாண்டமாக நவீன தொழில்நுட்பத்தில் அவரது உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது.
நிறுவனா் மணவாளன் நினைவேந்தல் நிகழ்வின்தொடா்ச்சியாக வரும் 26-ஆம் தேதி முதலாமாண்டு நினைவஞ்சலி கூட்டமும், சிகரம் தொட்ட பக்கங்கள் என்ற தலைப்பில் மணவாளன் குறித்த ஆவணப்படம் திரையிடலும் நடைபெறுகிறது. அப்போது, சாரதாஸ் பணியாளா்களில் மூத்தவா்கள் கௌரவிக்கப்பட உள்ளனா். இரவில் ஆவணப்படம் சாராதஸ் யுடியூப் சேனல் வாயிலாகவும் வெளியிடப்பட உள்ளது என்றனா்.