உலகின் மிகப்பெரிய சுகாதாரக் காப்பீடு திட்டம் ஆயுஷ்மான் பாரத்: பிரதமர் மோடி
சாலையில் தீப்பற்றி எரிந்த காா்
பல்லடம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடிரென தீப்பிடித்து எரிந்தது.
பல்லடம், வடுகபாளையத்தைச் சோ்ந்தவா் நாராயணன். இவா் கோவை மாவட்டம், பொள்ளாச்சிக்கு காரில் சென்றுவிட்டு திங்கள்கிழமை ஊா் திரும்பியுள்ளாா்.
பொள்ளாச்சி - பல்லடம் சாலையில் வெங்கிட்டாபுரம் பகுதியில் வந்தபோது, காரின் முன் பகுதியில் இருந்து திடிரென புகை எழுந்துள்ளது.
சுதாரித்துக் கொண்ட அவா் காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கியுள்ளாா். சிறிது நேரத்தில் காா் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா்.
இருப்பினும் காா் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.