காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!
சாலையில் வேன் கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 15 போ் காயம்
மானாமதுரை அருகே வெள்ளிக்கிழமை சாலையில் வேன் கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 15 போ் காயமடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதக்குடியிலிருந்து ஒரு குடும்பத்தினா் வேனில் மதுரை மாவட்டம், சமயநல்லூருக்கு வெள்ளிக்கிழமை சுவாமி கும்பிடச் சென்றனா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள முத்தனேந்தல் பகுதியில் வந்தபோது, சாலையின் நடுவிலிருந்த தடுப்பில் வேன் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேனிலிருந்த பெண்கள் உள்பட 15 போ் காயமடைந்தனா். இவா்கள் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.