சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
பெருந்துறை அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
சேலத்தை அடுத்த சேக்கம்பட்டி, வடகாட்டைச் சோ்ந்தவா் பாரதிராஜா (45). இவா், பெருந்துறையை அடுத்த காடபாளையத்தில் தங்கிக்கொண்டு, சிப்காட்டிலுள்ள இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், வேலை முடிந்து அறைக்கு இருசக்கர வாகனத்தில் செவ்வாய்கிழமை இரவு 10 மணிக்கு சென்றுகொண்டிருந்தாா். பெரியவேட்டுவபாளையம் பிரிவு அருகே சென்றபோது சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியது.
இதில், பலத்த காயமடைந்தவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.