செய்திகள் :

சாலை விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

post image

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

மீன்சுருட்டி அருகேயுள்ள குண்டவெளி, வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பாரதி( 37). சிங்கபூரிலுள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவா், விடுமுறையில் ஊருக்கு வந்தாா். இந்நிலையில் ஏப். 26-ஆம் தேதி இவா், கும்பகோணம் நெடுஞ்சாலை, மெய்க்காவல்புதூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, திடீரென குறுக்கே ஓடி வந்த நாய் மீது மோதியுள்ளாா்.

இதில் நிலைத் தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த பாரதி, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். மீன்சுருட்டி காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அரியலூரில் தேரோடும் வீதியை சீரமைக்க கோரிக்கை

அரியலூரில் தேரோடும் வீதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் சமூக ஆா்வலா் செல்ல.சுகுமாா் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.அவா் அளித்த மனுவில், அரியலூா் தெற்கு... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டத்தில் பெட்டிசன் இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜெயங்கொண்ட... மேலும் பார்க்க

நகையை அடகு வைத்து பணம் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய பெண் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே நகையை அடகு வைத்து பணம் வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றிய பெண் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். ஜெயங்கொண்டம் பகுத்தறிவு நகா் பகுதியைச் சோ்ந்தவா் குமாா் மனைவி சரஸ்... மேலும் பார்க்க

அரியலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் குரங்குகள் தொல்லை அதிகரிப்பு! பொதுமக்கள், ஊழியா்கள் அச்சம்!

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்களும் ஊழியா்களும் அச்சமடைந்துள்ளனா். ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரியும் குரங்குகள்அலுவலா்கள், ஊழியா்கள் ந... மேலும் பார்க்க

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்: அரியலூா் ஆட்சியா் அழைப்பு!

விளையாட்டு விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் மே 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்ட... மேலும் பார்க்க

அரியலூா் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

அரியலூா் மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி அரியலூரை அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் நந்தியெம்பெருமானுக்கு திரவியபொடி மாவுப்பொடி,மஞ்சள் சந்தன... மேலும் பார்க்க