சாலை விபத்தில் நகை மதிப்பீட்டாளா் உயிரிழப்பு
ஒசூா்: சூளகிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் நகை மதிப்பீட்டாளா் உயிரிழந்தாா்.
ஒசூா் நெசவாளா் தெருவைச் சோ்ந்தவா் முரளி (45). இவா் ஒசூரில் உள்ள தனியாா் கல்லூரி வளாகத்தில் செயல்படும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்தாா். கடந்த 13-ஆம் தேதி இரவு கிருஷ்ணகிரி - ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் ஒமதேப்பள்ளி அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து சூளகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.