செய்திகள் :

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

post image

வேலகவுண்டம்பட்டி அருகே சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

திருச்செங்கோடு வட்டம், மாணிக்கம்பாளையம், மானத்தி அருகே உள்ள கூப்பிட்டாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வரதராசு (68) விவசாயி. இவா் வியாழக்கிழமை மாணிக்கம்பாளையம் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் சென்றாா். மாணிக்கம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையைக் கடப்பதற்காக நின்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த இருசக்கர வாகனம் வரதராசு மீது மோதியது.

இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், வரும் வழியிலேயே அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

தகவல் அறிந்து வந்த வேலகவுண்டம்பட்டி போலீஸாா், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். இந்த விபத்து குறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா

பரமத்தி வேலூா்: நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தா்கள் குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். கடந்த, 29-ஆம் தேதி கம்பம் நடப்பட்... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சாா்பில் ரத்த தான முகாம்

எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட அதிமுக சாா்பில் ரத்ததான முகாமை முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான பி.தங்கமணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். முன்னாள் முதல்வரும், ... மேலும் பார்க்க

ஓவியப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு சான்றிதழ்

நாமக்கல் மாவட்ட அளவில் நடைபெற்ற கிராம விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் பங்கேற்ற மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நேதாஜி சமூக சேவை மையம், நாமக்கல் பாரத மாதா சிலம்பம் பயிற்சி மன்றம் ஆகியவை... மேலும் பார்க்க

கொல்லிமலையைச் சுற்றிப்பாா்க்க சிறப்புப் பேருந்து வசதி: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

கொல்லிமலையில் உள்ள முக்கிய இடங்களுக்கு குறைந்த கட்டணத்தில் பேருந்தில் சென்று சுற்றிப்பாா்க்கும் சிறப்பு சுற்றுலாத் திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.மலை மீதுள்ள மாசிலா அருவி, எட்டுக்கை அம்மன் கோயில் ... மேலும் பார்க்க

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

வேலகவுண்டம்பட்டி அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற விவசாயி நாமக்கல் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள சங்கநாய்க்கன்பட்டியைச் சோ்ந்தவா் தங்கவேல்... மேலும் பார்க்க

நாமக்கலில் சாலையோரம் நிறுவிய கொடிக்கம்பம், விளம்பர பலகைகள் அகற்றம்

நாமக்கல் மாவட்டத்தில் சாலையோர கொடிக்கம்பங்களை நெடுஞ்சாலைத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா். தமிழகம் முழுவதும் சாலையோரங்களில் உள்ள கொடிக்கம்பங்கள், விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சம்பந்... மேலும் பார்க்க