”தெருவைக் காணவில்லை” - ஜி.பி.முத்து புகார்; வீட்டை முற்றுகையிட்ட ஊர் மக்கள்; போல...
சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு
பழனி அருகே இரு சக்கர வாகனம் மீது பால் வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த போடுவாா்பட்டியைச் சோ்ந்தவா் கிட்டுச்சாமி மகன் வசந்தகுமாா் (34). விவசாயியான இவா் செவ்வாய்க்கிழமை காலை போடுவாா்பட்டியிலிருந்து காளிபட்டி செல்லும் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த பால்வண்டி மோதியது. இதில் பலத்த காயமடைந்த வசந்தகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.