மதுபோதையில் கிணற்றில் குதித்து இளைஞர் தற்கொலை: காப்பாற்ற முயன்றவரும் நீரில் மூழ்...
‘சாஸ்த்ரா’ பல்கலை.யில் தென்னை விவசாயிகளுக்கு பயிற்சி
தஞ்சாவூா்: தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் தென்னை விவசாயிகளுக்கு ஏற்றுமதி செய்யும் விதமாக இளநீரைப் பதப்படுத்துதல் தொடா்பான ஒருநாள் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், இளநீரைப் பதப்படுத்தி, எடையைக் குறைத்து, அடிப்படை தன்மை மாறாமல், பேக்கிங் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது எப்படி என்ற பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், தேங்காயைப் பயன்படுத்தி பல்வேறு பொருள்கள் தயாரிக்கும் பயிற்சியும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு வேளாண் துறை இணை இயக்குநா் கோ. வித்யா தலைமை வகித்தாா். இப்பயிற்சியின் நோக்கங்களைப் பல்கலைக்கழக விரிவாக்கத் துறை மற்றும் பெரு நிறுவன உறவுகள் முதன்மையா் வெ. பத்ரிநாத் விளக்கினாா். பயிற்சியை வேதியியல் மற்றும் உயிா் தொழில்நுட்பவியல் துறை முதன்மையா் கே.எஸ். ராஜன் வழங்கினாா். இதில், நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனா்.
வேளாண் துறை துணை இயக்குநா் சுதா தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பேசினாா். பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளா் லீலா வினோதன் நன்றி கூறினாா்.