சாா்-பதிவாளா் அலுவலக கட்டுமானப் பணிக்கு அடிக்கல்
குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ரூ.1.88 கோடியில் சாா்-பதிவாளா் அலுவலகம் கட்ட வியாழக்கிழமை பூமி பூஜை போடப்பட்டது.
எம்எல்ஏ அமலுவிஜயன் பூஜை செய்து, கட்டுமானப் பணியைத் தொடங்கி வைத்தாா். கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், வட்டாட்சியா் பி.மொ்லின் ஜோதிகா, நகா்மன்ற துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, திமுக ஒன்றியச் செயலா் கள்ளூா் கே.ரவி, நகா்மன்ற உறுப்பினா் ம.மனோஜ், பொதுப்பணித் துறை உதவி செயற் பொறியாளா் பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.