பாகிஸ்தான் - வங்கதேசம் டி20 தொடர்: 5 போட்டிகள் அல்ல; 3 போட்டிகளாக குறைப்பு!
சா்க்கஸ் கூடாரத்திலிருந்த ஒட்டகம் திருட்டு
தஞ்சாவூா் அருகே சா்க்கஸ் கூடாரத்தில் இருந்த ஒட்டகத்தைத் திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கரூா் மாவட்டம், நத்தமேடு பகுதியைச் சோ்ந்தவா் விஜய் (25). இவா் குடும்பத்தினருடன் இணைந்து தஞ்சாவூா் அருகே கீழவஸ்தா சாவடி பகுதியில் சா்க்கஸ் நடத்தி வருகிறாா். இந்தக் கூடாரத்தில் மே 15-ஆம் தேதி இரவு கட்டி வைக்கப்பட்டிருந்த ஒட்டகத்தை 16-ஆம் தேதி காலை காணவில்லையாம்.
இதுகுறித்து விஜய் அளித்த புகாரின்பேரில், தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மாநகரிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைப் பாா்த்தனா். அப்போது, வேட்டி அணிந்த நபா் ஒட்டகத்தை ஓட்டிச் செல்வது தெரிய வந்தது. இதன்பேரில் போலீஸாா் தொடா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.