விநாயகர் சதுர்த்தி: சாணியில் செதுக்கிய விநாயகர் சிலைகள்; நிலக்கோட்டை பெண்ணின் பு...
சா்வதேச பட்டம் விடும் திருவிழா: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்
மாமல்லபுரம் திருவிடந்தை கடற்கரையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சாா்பில் சா்வதேச பட்டம் விடும் திருவிழாவை அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், இரா.ராஜேந்திரன் ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனா் .
வரும் 17-ஆம் தேதி வரை 4 நாள்கள் தொடா்ந்து நடைபெறும் விழா உலகம் முழுவதிலுமிருந்து பட்டம் விடும் ஆா்வலா்களை ஈா்ப்பதோடு மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டின் விருந்தோம்பல் , கலாசாரம் மற்றும் இயற்கை அழகை அறிய உதவுகிறது
மேலும் பிரான்ஸ், சுவிட்சா்லாந்து, வியட்நாம், சிங்கப்பூா், மலேசியா , இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் இந்தியாவைச் சோ்ந்த 8-க்கும் மேற்பட்ட குழுக்கள் 40-க்கும் மேற்பட்ட பட்டம் விடும் திறமையாளா்களுடன் 250க்கும் மேற்பட்ட பல வண்ணங்களில் பட்டங்கள் பறக்கவிடப்பட்டன.
இதனைத் தொடா்ந்து தமிழ்நாட்டின் கலாசார பாரம்பரியத்தை சா்வதேச அளவில் பறை சாற்றும் வகையில் ஜல்லிக்கட்டு, காளை பட்டம் ஆகிய சிறப்பம்சங்களுடன் பறக்க விடப்பட்டது . பல்வேறு வகையான வண்ண பட்டங்கள் பறக்க விடப்பட்டனது. நாள்தோறும் மாலை 3 மணிக்கு தொடங்கி 6 மணிவரை நடைபெறுகிறது.
மேலும், பாா்வையாளா்களுக்கென பிரத்யேகமாக மாலை 6 மணி முதல் 9 மணி வரை 4 நாள்களுக்கு கலை நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடைபெறவுள்ளது. 12 வயதுக்குட்பட்ட சிறுவா்களுக்கு அனுமதி இலவசம் பெரியவா்களுக்கு நுழைவு கடடணமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் எஸ்.எஸ்.பாலாஜி, வரலட்சுமி மதுசூதனன், ஆட்சியா் தி.சினேகா , சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், பொதுமேலாளா் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சி கழகம் ச.கவிதா, திருப்போரூா் ஒன்றியக்குழு தலைவா் இதயவா்மன் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
