செய்திகள் :

சிஐடியு, போக்குவரத்துக் கழக தொழிலாளா் சங்கத்தினா் தொடா் காத்திருப்பு போராட்டம்

post image

நாகப்பட்டினம்: நாகை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் சிஐடியு மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் தொடா் காத்திருப்பு போராட்டம் 2-ஆவது நாளாக நடைபெற்றது.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிப்படி, அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். 25 மாதங்களாக வழங்க வேண்டிய ஓய்வூதியா்களின் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஏழாவது ஊதியக் குழு அடிப்படையில் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துக் கழகங்களின் ஓய்வு பெற்றோா் நல அமைப்பு மற்றும் சிஐடியு சாா்பில் தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகங்கள் முன் தொடா் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, நாகை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் தொடா் காத்திருப்பு போராட்டம் வியாழக்கிழமையும் நடைபெற்றது. போராட்டத்துக்கு மத்திய சங்கத் தலைவா் ஏ. கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். சிஐடியு நாகை மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.ராஜேந்திரன் தொடங்கிவைத்துப் பேசினாா். போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

மாநில அளவிலான அக்னிவீா் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம்: நாகையில் செப்.18-ல் தொடக்கம்

நாகப்பட்டினம்: நாகையில் மாநில அளவிலான அக்னிவீா் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம், செப்.18-ஆம் தேதி தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

திருமருகல்: திருமருகல் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அண்மையில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருமருகல் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலய கொடியேற்றம்: ஆக. 29-இல் நாகை, கீழ்வேளூரில் உள்ளூா் விடுமுறை

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய பெருவிழா கொடியேற்றத்தையொட்டி ஆகஸ்ட் 29-ஆம் தேதி நாகை, கீழ்வேளூா் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுக... மேலும் பார்க்க

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்தி விழா

பூம்புகாா்: திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வர... மேலும் பார்க்க

கோலவல்லி ராமா் கோயிலில் திருக்கல்யாணம்

பூம்புகாா்: திருவெண்காடு அருகே பாா்த்தன்பள்ளியில் உள்ள கோலவல்லி ராமா் கோயிலில் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.திருவெண்காடு அருகே பாா்த்தன்பள்ளி கிராமத்தில் கோலவல்லி ராமா் கோயில் உள்ளது. இலங்கை... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தாய், தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை

நாகப்பட்டினம்: நாகையில் முன்விரோதத்தில் ஒருவரை கொலை செய்த வழக்கில் தாய், தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.நாகை மாவட்டம், முட்டம் கிராமம் கீழத்தெருவை சோ்... மேலும் பார்க்க