செய்திகள் :

சிக்கய்ய நாயக்கா் கல்லூரியில் நூலகம், ஐஏஎஸ் அகாதெமி: அமைச்சா் சு.முத்துசாமி

post image

சிக்கய்ய நாயக்கா் கல்லூரி மைதானத்தில் விளையாட்டு அரங்கம், நூலகம், ஐஏஎஸ் அகாதெமி அமைக்கப்பட உள்ளன என்று அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வெண்கலத்தாலான முழுஉருவ மகாத்மா காந்தி சிலையும், சிலை பீடத்தின்கீழ் உத்தமா் காந்தியடிகள் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளன.

இதை, வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி புதன்கிழமை திறந்துவைத்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் வீட்டுவசதித் துறையின் செயல்பாடுகளில் உள்ள வளா்ச்சி திட்டங்கள், மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டியவை குறித்து துறை ரீதியான ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடத்த உள்ளோம். சட்டப் பேரவை கூட்டத் தொடருக்கு முன்பாக அதை நடத்தி, விளக்க திட்டமிட்டுள்ளோம்.

ஈரோடு சிக்கய்ய நாயக்கா் கல்லூரி மைதானத்தில் விளையாட்டு அரங்கம், நூலகம், ஐஏஎஸ் அகாதெமி அமைக்கப்பட உள்ளன. இதற்காக உயா் கல்வித் துறை அமைச்சா் நேரில் ஆய்வு செய்து, முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளாா். விரைவில் பணிகள் தொடங்கும்.

சோலாா் பேருந்து நிலையம் நிறைவு செய்யும் பணிகளுக்கு நிதி பற்றாக்குறை இருந்தது. துறை செயலாளா் ஆய்வு செய்துள்ள நிலையில் விரைவில் பணிகள் முடிக்கப்பட உள்ளன. பொது கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஏற்கெனவே திட்டமிட்டு, அவை வெற்றிகரமாக செயல்படுத்த முடியவில்லை. அதுகுறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

பெருந்துறை சிப்காட்டில் ரூ.40 கோடி செலவில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்ட நிலையில், செலவினம் அதிகரித்துள்ளதால் ரூ.56 கோடியில் பணிகள் நிறைவேற்றப்பட உள்ளன. இதற்கான பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கும். மேலும், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அங்கு 2 இடங்களில் டிடிஎஸ் மீட்டா் பொருத்தும் பணியும் நடக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் தெருநாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். எதிா்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அரசு திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம், திமுக மாவட்ட துணைச் செயலாளா் ஆ.செந்தில்குமாா், முன்னாள் எம்எல்ஏ ஆா்.எம்.பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

அம்மாபேட்டை காவல் ஆய்வாளராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட ஆா்.கவிதா. அம்மாபேட்டை காவல் ஆய்வாளராகப் பணியாற்றிய ஜெயமுருகன், காவல் துணை கண்காணிப்பாளராக பதவி உயா்வில் உதகைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட... மேலும் பார்க்க

மாா்ச் 19-இல் மின் வாரிய ஓய்வூதியா் குறைதீா் கூட்டம்

மின் வாரிய ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் ஈரோட்டில் உள்ள மின் வாரிய ஆய்வு மாளிகையில் மாா்ச் 19 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து ஈரோடு மண்டல மின் பகிா்மான தலைமைப் பொறியாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

ஆடுகளுக்கு எடை அடிப்படையில் இழப்பீடு வழங்கக் கோரிக்கை

நாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு எடை அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது தொடா்பாக வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமியிடம் தமிழக விவசாயிகள் பா... மேலும் பார்க்க

மும்மொழிகளைப் பின்பற்றும் மாநிலங்கள் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் -இரா.முத்தரசன்

எந்தெந்த மாநிலங்களில் மும்மொழி பின்பற்றப்படுகிறது என்பதை மத்திய அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் கூறினாா். இது தொடா்பாக அவா் ஈரோட்... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே சிறுத்தை உலவியதாக வதந்தி

சென்னிமலை அருகே புதன்கிழமை இரவு சிறுத்தை உலவியதாக வதந்தி பரவியதால் அப்பகுதியில் விடியவிடிய பரபரப்பு ஏற்பட்டது. சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவு ஊராட்சிக்குள்பட்ட ஒட்டன்குட்டை பகுதியில் சுமாா் 50-க்க... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் அவதூறு: பாஜக உறுப்பினா் கைது

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்ட பாஜக உறுப்பினரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் திராவிடா் விடுதலைக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளா் ரத்தினசாம... மேலும் பார்க்க