Mani Ratnam: ``இதற்கு இரண்டு தசாப்தங்கள் ஆகியிருக்கிறது மணி சார்!'' - ராஜ்குமார...
சிங்கம்புணரி சுற்றுவட்டார பகுதிகளில் மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, பிரான்மலை, செல்லியன்பட்டி, காளாப்பூா், சூரக்குடி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் நூற்றுக்கணக்கான காளைகள் பங்கேற்றன.
சிங்கம்புணரி சுற்று வட்டாரப் பகுதிகளில் மாட்டுப் பொங்கல் அன்று மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். சிங்கம்புணரி பகுதியில் சீரணி அரங்கம், பெரியகடை வீதி பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன. முன்னதாக, சேவுகப் பெருமாள் கோயில் காளைகள் அலங்கரிக்கப்பட்டு, துண்டு, வேஷ்டிகளுடன் தொழுவுக்கு கொண்டு வரப்பட்டன. பிறகு ஒன்றன் பின் ஒன்றாக மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்த மாடுகளை மாடுபிடி வீரா்கள், பொதுமக்கள் தொட்டு வணங்கினா். இதில் 20 போ் காயமடைந்தனா்.
இதேபோல, காளாப்பூா், சூரக்குடி, பிரான்மலை, செல்லியம்பட்டு, எஸ்.எஸ்.கோட்டை ஆகிய கிராமப் பகுதிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்த்துவிடப்பட்டன. ஊா்க் கோயில் காளைகள் மட்டும் தொழுவின் அருகே வைத்து மாலை மரியாதை செய்யப்பட்டு அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அந்தந்த கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் பிடித்து மகிழ்ந்தனா்.