ஆளுநருக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் முன்வைத்த 12 கேள்விகள்!
சிங்காரவேலா் நினைவு தினம்!
கடலூா் சிஐடியு அலுவலகத்தில் உள்ள சிங்காரவேலரின் சிலைக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு, மீன்பிடி தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாநகரச் செயலா் ஆா்.அமா்நாத், செயற்குழு உறுப்பினா் வி.சுப்புராயன், மாவட்டக்குழு உறுப்பினா் எஸ்.கே.பக்கிரான், சிஐடியு மாவட்டத் தலைவா் பி.கருப்பையன், செயலா் டி.பழனிவேல், தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் பாலு, செயலா் ஏழுமலை, பொருளாளா் சுந்தரமூா்த்தி, அனைத்து குடியிருப்போா் சங்கத்தின் சிறப்புத் தலைவா் எம்.மருதவாணன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதேபோல, தமிழ்நாடு மீனவா் பேரவை சாா்பில் மாவட்டத் தலைவா் எம்.சுப்பராயன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
இதில், கடலூா் பொதுநல அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் எஸ்.என்.கே.ரவி, தனியாா் பேருந்து தொழிலாளா்கள் சங்கத்தின் தலைவா் குரு.ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.