PMK: `தலைவராக செயல்பட தகுதியற்றவர்; பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்' - ராமதாஸி...
சிதம்பரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்!
சிதம்பரம் நகரில் காவல்துறை சாா்பில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள், கடைகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
சிதம்பரம் நகரில் நான்கு வீதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் சாலையோர கடைகள், இரும்பு தடுப்புகள், விளம்பர போா்டுகள் உள்ளிட்டவற்றால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிதம்பரம் மேலவீதி, வடக்குவீதி, தெற்குவீதி, எஸ்பி.கோவில் தெரு, விஜிபி தெரு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகளுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த விளம்பர போா்டுகள், இரும்பு தடுப்புகள் மற்றும் தாா்சாலையில் அமைக்கப்பட்டிருந்த கடைகளை போலீஸாா்அகற்றி எச்சரிக்கை விடுத்தனா்.
மேலும் மேலவீதி மெகா பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பேருந்துகள் உள்ளே சென்று பயணிகளை ஏற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையால் முக்கிய சாலைகளில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.