செய்திகள் :

'சித்தா' பட இயக்குநர் அருண்குமார் திருமணம்; நேரில் சென்று வாழ்த்திய விஜய் சேதுபதி, விக்ரம்!

post image
கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‛பண்ணையாரும் பத்மினியும்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் S.U. அருண்குமார்.

இதனைத்தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ‛சேதுபதி' படத்தை இயக்கினார். அந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து 3வது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்த அவர், ‛சிந்துபாத்' படத்தை இயக்கி, 2019ல் வெளியிட்டிருந்தார். அதன் பிறகு கடந்த 2023-ல் சித்தார்த்தை வைத்து 'சித்தா' படத்தை இயக்கி இருந்தார்.

இயக்குநர் அருண்குமார் திருமணம்
இயக்குநர் அருண்குமார் திருமணம்

இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. தற்போது விக்ரமை வைத்து ‛வீர தீர சூரன்' திரைப்படத்தை அருண்குமார் இயக்கி இருக்கிறார்.

இந்த படம் மார்ச் மாதம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இயக்குநர் அருண்குமார் திருமணம்

இந்நிலையில் இன்று (பிப்.2) இயக்குநர் அருண்குமாரின் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் விக்ரம், விஜய் சேதுபதி, சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, விக்னேஷ் சிவன் எனப் பலர் கலந்துகொண்டு அருண்குமாரை வாழ்த்தி இருக்கின்றனர். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

'உனக்காகப் பொறந்தேனே எனதழகா...!' - `சித்தா' பட இயக்குநர் அருண்குமார் திருமண க்ளிக்ஸ்|Photo Album

‛பண்ணையாரும் பத்மினியும்' படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் S.U. அருண்குமார். கடந்த 2023-ல் சித்தார்த்தை வைத்து 'சித்தா' படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவு... மேலும் பார்க்க

'என்னவளே அடி என்னவளே...!' - பாடகர் உன்னிகிருஷ்ணன் மகன் திருமண க்ளிக்ஸ் | Photo Album

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpXசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொ... மேலும் பார்க்க

கோலாகலமாக நடைபெற்ற பாடகர் உன்னி கிருஷ்ணன் மகன் திருமணம்; வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் எண்ணற்ற பாடல்களைப் பாடி இருக்கிறார் பாடகர் உன்னி கிருஷ்ணன்.உன்னி கிருஷ்ணனுக்கு வாசுதேவ் கிருஷ்ணா என்ற ஒரு மகனும், மற்றும் உத்ரா என்ற ஒரு மகளும் உள்ளனர... மேலும் பார்க்க

Ajith: ``அஜித் சாருக்கு பாராட்டு விழா நடத்தணும்...'' - விருப்பம் தெரிவித்த யோகி பாபு

அஜித்துக்கு தனி பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார் யோகி பாபு.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் 'விடாமுயற்சி' மற்றும் 'குட் பேட் அக்லி' என இரண்டு படங்கள் ரிலீ... மேலும் பார்க்க

Sk: "அப்பா, இன்னைக்கு நான் படிச்ச பள்ளியிலேயே சீஃப் கெஸ்ட்..." - சிவகார்த்திகேயன் உருக்கம்

சுதாகொங்கராவின் 'பராசக்தி' படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், இரண்டு நாட்களுக்கு முன்பு தான் படித்த திருச்சி தனியார் பள்ளிக்கு சிறப்பு விருந்தினராகச் சென்றிருக்கிறார். அப்போது த... மேலும் பார்க்க