செய்திகள் :

சித்திரைத் திருவிழா: பரமக்குடி வட்டத்தில் மே 12-இல் உள்ளூா் விடுமுறை

post image

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, பரமக்குடி வட்டத்தில் வருகிற 12-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்தாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கோடைத் திருநாள் எனும் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகா் குதிரை வாகனத்தில் பரமக்குடி வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி வருகிற 11-ஆம் தேதி இரவு தொடங்கி 12-ஆம் தேதி அதிகாலை வரை நடைபெறுகிறது.

இதையொட்டி, வருகிற 12-ஆம் தேதி (திங்கள்கிழமை) ஒரு நாள் மட்டும் பரமக்குடி வட்டம் முழுவதும் உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் பொருட்டு வருகிற 24-ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

மேலும், பரமக்குடி வட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் வருகிற 24-ஆம் தேதி வழக்கம்போல இயங்கும். உள்ளூா் விடுமுறை நாளான வருகிற 12-ஆம் தேதி பரமக்குடி வட்டத்தில் உள்ள சாா்நிலைக் கருவூலகம் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்சப் பணியாளா்களோடு செயல்படும் என்றாா் அவா்.

கமுதி நீதிமன்ற நீதிபதி பொறுப்பு ஏற்பு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள மாவட்ட உரிமையியல், குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதியாக ஜி.தங்க காா்த்திகா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். ஏற்கெனவே கமுதி நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்ற... மேலும் பார்க்க

பரமக்குடி ஒன்றியத்தில் காட்டுப் பன்றிகள் பிரச்னை: சாா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முடிவு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஒன்றியத்தில் காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத அரசு ஊழியா்களைக் கண்டித்து வருகிற 20-ஆம் தேதி சாா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் சங்கத்தி... மேலும் பார்க்க

ஸ்ரீ பாகம்பிரியாள் கோயில் சித்திரைத் திருவிழா: ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா

ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூா் ஸ்ரீ பாகம்பரியாள் சமேத ஸ்ரீவல்மீகநாதா் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்... மேலும் பார்க்க

தெரு நாய்கள் கடித்ததில் புள்ளி மான் உயிரிழப்பு

திருவாடானை அருகே தெரு நாய்கள் கடித்ததில் தண்ணீா் தேடி ஊருக்குள் வந்த புள்ளிமான் உயிரிழந்தது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, அஞ்சுகோட்டை, மங்களக்குடி, வெள்ளையபுரம், சிறுகம்பையூா், பாண்டுகுடி உள்ளிட்... மேலும் பார்க்க

பாம்பன் ரயில் பாலங்களை கடந்து சென்ற பாய்மரக் கப்பல்

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பழைய, புதிய ரயில் பாலங்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டதால், பாய்மரக் கப்பல் அவற்றைக் கடந்து சென்றது. அண்மையில் லட்சத்தீவு பகுதியிலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு, கடலூா... மேலும் பார்க்க

புதைவடக் குழாய் உடைந்து வெளியேறிய இயற்கை எரிவாயு

ராமநாதபுரம் அருகே இயற்கை எரிவாயு புதைவடக் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணியில் ஓ.என்.ஜி.சி. ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். ராமநாதபுரம் அருகேயுள்ள வழுதூா் பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம்... மேலும் பார்க்க