2,642 மருத்துவா் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு தொடக்கம்
சித்ரவதை செய்த குடிகார கணவருக்கு டாட்டா... கடன் வசூலிக்க வந்த வங்கி ஏஜெண்டுடன் திருமணம் செய்த பெண்!
குடி குடியை கெடுக்கும் என்பதற்கு பீகாரில் நடந்த சம்பவம் உதாரணமாக அமைந்துள்ளது. பீகார் மாநிலம் ஜமுய் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திரா. இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இந்திராவின் கணவர் குடிகாரர் என்பது திருமணத்திற்கு பிறகுதான் இந்திராவிற்கு தெரிய வந்தது. அடிக்கடி இந்திராவை அவரது கணவர் மது அருந்திவிட்டு வந்து சித்ரவதை செய்து கொண்டிருந்தார். அதோடு இந்திராவின் கணவர் அங்குள்ள வங்கி ஒன்றில் கடன் வாங்கி இருந்தார். அந்த கடனை இந்திராவின் கணவர் சரியாக திரும்ப செலுத்தவில்லை.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/itgqbf5r/1873996-marriage.webp)
இதனால், வங்கியின் கடன் வசூலிப்பு ஏஜெண்ட் பவன் குமார் இந்திராவின் வீட்டிற்கு கடனை வசூலிக்க சென்றார். அப்படி அடிக்கடி இந்திராவின் வீட்டிற்கு சென்றபோது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. இந்திராவிடம் போன் நம்பரை வாங்கிய பவன் குமார் கடனை வசூலிக்க எப்போது வரவேண்டும் என்று போனில் கேட்க ஆரம்பித்தார்.
ஆரம்பத்தில் வங்கி கடன் தொடர்பாக பேசிய இருவரும் நாளடைவில் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்தனர். இந்திராவிற்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகி இருந்தது. குழந்தையும் இல்லை. அதோடு அடிக்கடி கணவர் குடித்துவிட்டு வந்து சித்ரவதை செய்ததால் பவன் குமாரை திருமணம் செய்ய இந்திரா முடிவு செய்தார். இதையடுத்து வீட்டை விட்டு தப்பி ஓடிய இந்திரா அருகில் உள்ள பூத்நாத் கோயிலுக்கு சென்று பவன் குமாரை திருமணம் செய்து கொண்டார். இதனால் இந்திராவின் முதல் கணவர் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்திராவின் பெற்றோர் வேறு வழியில்லாமல் இரண்டாவது திருமணத்தை ஏற்றுக்கொண்டனர்.