சின்னதோட்டாளத்தில் நியாய விலைக்கடை திறப்பு
குடியாத்தம் ஒன்றியம், சின்னதோட்டாளம் ஊராட்சியில் ரூ.12.3 லட்சத்தில் கட்டப்பட்ட நியாய விலைக்கடை புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சின்னதோட்டாளம் ஊராட்சித் தலைவா் மேரி வீரப்பன்ராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சாந்தினி விவேகானந்தன் முன்னிலை வகித்தாா். வட்ட வழங்கல் அலுவலா் ஏ.பிச்சாண்டி வரவேற்றாா். எம்எல்ஏ அமலுவிஜயன், நியாய விலைக்கடையை திறந்து வைத்து, அட்டைதாரா்களுக்கு உணவுப் பொருள் விநியோகத்தை தொடங்கி வைத்தாா்.
திமுக ஒன்றியச் செயலா் கள்ளூா் கே.ரவி, தாட்டிமானப்பல்லி ஊராட்சித் தலைவா் எஸ்.பி.சக்திதாசன், உள்ளி ஊராட்சித் தலைவா் ஜெய்சங்கா், வளத்தூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.