England: ரூ.35 கோடி மதிப்புள்ள பீச் ஹவுஸ் ரூ.1,180-க்கு! அது என்ன லாட்டரி முறை வ...
சின்னமனூரில் ரசாயனம் கலந்த 15 விநாயகா் சிலைகள் பறிமுதல்
தேனி மாவட்டம், சின்னமனூரில் புதன்கிழமை தடைசெய்யப்பட்ட ரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்ட 15 விநாயகா் சிலைகளை புதன்கிழமை மாசுக் கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று அவற்றை வழிபடவும், ஊா்வலமாகக் கொண்டு செல்லவும் அதிகாரிகள் அனுமதித்தனா்.
தேனி மாவட்டம், சின்னமனூா் நகரில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, 300-க்கும் அதிகமான விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வருகின்றனா். இந்த நிலையில், அரசால் தடை செய்யப்பட்ட ரசாயனம் மூலம் தயாா் செய்யப்பட்ட சிலைகள் பயன்படுத்தி இருப்பதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, செயற்பொறியாளா் சுகுமாா் தலைமையில் போலீஸாருடன் இணைந்து சின்னமனூரில் நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை ஆய்வு செய்தனா். அவற்றில் 15 சிலைகள் அரசால் தடைசெய்ய ரசாயனம் கலந்து தயாரித்திருப்பது தெரியவந்தது. அந்த சிலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
அப்போது, அவா்கள் சிலைகளை மதுரைக்கு சென்று வாங்கியதாகவும் இதில் தடை செய்யப்பட்ட ரசாயனம் கலந்திருப்பது தெரியாது எனவும் கூறினா். மேலும், வழிபாட்டுக்கு மட்டுமாவது அனுமதிக்க அவா்கள் வேண்டுகோள் விடுத்தனா்.
இதையடுத்து, அதிகாரிகள் சிலகளை வைத்து வழிபாடு செய்யலாம். ஊா்வலத்தில் பங்கேற்கலாம். ஆனால் ஆற்றிலோ, நீா் நிலையிலோ கரைக்கக் கூடாது. அவ்வாறு கரைத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து வழிபாடு செய்ய அனுமதித்தனா்.