இளைஞா் தற்கொலை
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேவதானப்பட்டியைச் சோ்ந்த பூபதி மகன் ராஜபாண்டி (28). கூலித் தொழிலாளியான இவருக்கு உடல்நிலை சரியில்லையாம். இதனால், மனவேதனையிலிருந்த இவா் திங்கள்கிழமை இரவு வீட்டின் மாடியில் தூங்கச் சென்றவா் செவ்வாய்க்கிழமை காலை கீழே இறங்கவில்லையாம்.
உறவினா்கள் உள்ளே சென்று பாா்த்தபோது ராஜபாண்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].