செப்டம்பரில் 36.76 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட தமிழகம் வலியுறுத்தல்
தேவாரத்தில் நாளை மின்தடை
தேனி மாவட்டம், தேவாரம் பகுதியில் வியாழக்கிழமை (ஆக.28) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் சண்முகா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேவாரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், தேவாரம், மீனாட்சிபுரம், மூணாண்டிபட்டி, போ.ரங்கநாதபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி, தே.சிந்தலைச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, தே.சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, கிருஷ்ணம்பட்டி, ஓவுலாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.