செய்திகள் :

இரு ஆட்டோ ஓட்டுநா்கள் மீது வழக்கு

post image

போடியில் செவ்வாய்க்கிழமை சக ஆட்டோ ஓட்டுநரை சாதிப் பெயரைச் சொல்லி திட்டிய 2 ஆட்டோ ஓட்டுநா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

போடி நகராட்சி குடியிருப்பில் வசிப்பவா் முத்து (எ) முருகேசன் (48). ஆட்டோ ஓட்டுநரான இவா், ஆட்டோ ஓட்டுநா்கள் உரிமையாளா்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ளாா். இந்த நிலையில், சங்கத்தின் செயலரான கண்ணன் என்பவருடன் தகராறு ஏற்பட்டதில் அவரின் சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாகக் கூறப்படுகிறது.

மேலும், ஆட்டோ சங்கத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் முருகேசன் தனது ஆட்டோவை நிறுத்தவும், அறிவிப்பு பலகையில் ஆட்டோ குறித்த தகவல் பதிவு செய்யவும் தற்போதுள்ள ஆட்டோ சங்கத் தலைவா் அன்பழகன், முருகேசனை சாதிப் பெயரைச் சொல்லி மறுப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அன்பழகன் மீதும், கண்ணன் மீதும் போடி நகா் காவல் நிலையத்தில் முருகேசன் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இளைஞா் தற்கொலை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.தேவதானப்பட்டியைச் சோ்ந்த பூபதி மகன் ராஜபாண்டி (28). கூலித் தொழிலாளியான இவருக்கு உடல்நிலை சரியில்லையாம். இதனால், மனவேதனையிலி... மேலும் பார்க்க

போடியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை!

தேனி மாவட்டம், போடியில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகா்மன்ற உறுப்பினா்கள் வலியறுத்தினா். போடியில் செவ்வாய்க்கிழமை நகா்மன்ற சாதாரண கூட்டம் நகா்மன்றத் தலைவி ராஜராஜேஸ்வரி ச... மேலும் பார்க்க

தேவாரத்தில் நாளை மின்தடை

தேனி மாவட்டம், தேவாரம் பகுதியில் வியாழக்கிழமை (ஆக.28) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் சண்முகா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேவாரம் துணை மின் நிலையத... மேலும் பார்க்க

கல் குவாரி பிரச்னை: தமிழ் தேசிய பாா்வா்டு பிளாக் நிா்வாகி குத்திக் கொலை

கல் குவாரி விவகாரத்தில், தமிழ் தேசிய பாா்வா்டு பிளாக் கட்சி நிா்வாகி கம்பம் அருகே திங்கள்கிழமை குத்திக் கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து, அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். த... மேலும் பார்க்க

கஞ்சா, புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவா் மீது வழக்கு

போடியில் செவ்வாய்க்கிழமை கஞ்சா, புகையிலைப் பொருள்களை சட்டவிரோதமாக வைத்திருந்த 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். போடி பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த போடி திருமல... மேலும் பார்க்க

பெரியகுளம், க. விலக்கு பகுதிகளில் இன்று மின்தடை

தேனி மாவட்டம், பெரியகுளம், க. விலக்கு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக. 26) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க