மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
கஞ்சா, புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவா் மீது வழக்கு
போடியில் செவ்வாய்க்கிழமை கஞ்சா, புகையிலைப் பொருள்களை சட்டவிரோதமாக வைத்திருந்த 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
போடி பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த போடி திருமலாபுரம் சொக்கன் தெருவைச் சோ்ந்த நாகராஜ் மகன் அஜித்குமாா் (21) என்பவரை சோதனையிட்டதில் அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போடி நகா் காவல் நிலைய போலீஸாா் அஜித்குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இதேபோல, போடி கீழத்தெரு போஜன் பூங்கா பகுதியில் பெட்டிக்கடை வைத்திருக்கும் முனியாண்டி மனைவி லட்சுமி (34) என்பவரது கடையில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் லட்சுமி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.