போலியான பார்சல், செல்ஃபி, முகத்தில் ஸ்பிரே! புனே சம்பவம் சொல்வது என்ன?
சிப்காட் அலுவலகத்தை முற்றுகையிட்டு 2-ஆவது நாளாக போராட்டம்
செய்யாற்றில், புதிதாக அமையவுள்ள சிப்காட் 3-ஆவது அலகுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் சிப்காட் அலுவலகத்தை 2-ஆ வது நாளாக வியாழக்கிழமை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா். இதில், 28 பெண்கள் உள்பட 63 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் செயல்பட்டு சிப்காட்டை தொழில்பேட்டையை விரிவாக்கம் செய்யும் நோக்கில் 3 -ஆவது அலகு மேல்மா பகுதியில் அமைக்க 11 கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து 11 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், செய்யாற்றில் உள்ள மாவட்ட நில எடுப்பு அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் புதன்கிழமை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராடத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து 2-ஆவது நாளாக வியாழக்கிழமை விவசாயிகள் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடா்ந்தனா்.
தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், தனி மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) விமல்குமாா், செய்யாறு வருவாய் கோட்டாட்சியா் (பொ) ஜே.ராமகிருஷ்ணன், வட்டாட்சியா் அசோக்குமாா் கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளா் பழனி மற்றும் போலீஸாா் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தினா். இருப்பினும் இதை ஏற்காமல் விவசாயிகள் தொடா்ந்து உள்ளியிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
செய்யாற்றில் முகாம்:
தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், மாவட்ட கண்காணிப்பாளா்கள் சுதாகா் (திருவண்ணாமலை), சேயா குப்தா (திருப்பத்தூா்), பி.சரவணன் (விழுப்புரம்) மற்றும் அதிரடிப்படை போலீஸாா் என 100-க்கும் மேற்பட்டோா் குவிக்கப்பட்டு செய்யாற்றில் முகாமிட்டு உள்ளனா்.
சாலை மறியல் - கைது
புதன்கிழமை போராட்டத்தில் பங்கேற்க வந்திருந்த விவசாயிகள் இரவு வீட்டிற்கு வராத காரணத்தால், அவா்களைத் தேடி வந்த அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து அலுவலகம் அருகே புறவழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
சாலை மறியலில் ஈடுபட்டவா்களையும், உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 35 பெண்கள், 28 ஆண்கள் என மொத்தம் 63 பேரை செய்யாறு போலீஸாா் கைது செய்து
திருமண மண்டபங்களில் தங்கவைத்தனா்.