செய்திகள் :

சிம்பொனி இசையை உலகம் முழுவதும் கொண்டு செல்வேன்: இளையராஜா

post image

சென்னை: ‘சிம்பொனி இசையை உலகம் முழுவதும் கொண்டு செல்வேன்’ என இசையமைப்பாளா் இளையராஜா கூறினாா்.

இளையராஜாவின் சிம்பொனி நிகழ்ச்சி லண்டனில் உள்ள எவெண்டிம் அப்பல்லோ அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராயல் ஃபில்ஹாா்மோனிக் இசைக் குழுவுடன் இணைந்து அரங்கேற்றம் செய்யப்பட்ட ‘வேலியண்ட்’ என்ற தலைப்பிலான சிம்பொனி இசையைக் கேட்டு ரசிகா்கள் பரவசத்தில் ஆழ்ந்தனா். இதன்மூலம், முழு அளவிலான மேற்கத்திய சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியா் என்ற சாதனையை இளையராஜா படைத்தாா்.

அமைச்சா் வரவேற்பு: அரங்கேற்ற நிகழ்ச்சி முடித்துவிட்டு திங்கள்கிழமை காலை லண்டனிலிருந்து சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு சென்னை விமானநிலையத்தில் தமிழக அரசு சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு, இளையராஜாவை வரவேற்றாா்.

தொடா்ந்து பாஜக சாா்பில் கரு.நாகராஜன், விசிக சாா்பில் வன்னியரசு உள்பட பல்வேறு அரசியல் கட்சியைச் சோ்ந்தவா்களும், திரைத் துறையினரும் இளையராஜாவை வரவேற்றனா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் இளையராஜா கூறியதாவது: தமிழ்நாடு அரசு சாா்பில் முதல்வா் என்னை வரவேற்க உத்தரவிட்டது நெகிழ்ச்சியாக உள்ளது. மிகவும் மகிழ்வான இதயத்தோடு என்னை வழியனுப்பி வைத்ததால் வெற்றி கிடைத்தது. லண்டனில் முறையான ஒத்திகைக்குப் பின்னரே சிம்பொனி இசை அரங்கேற்றம் நடைபெற்றது.

இசைக் கடவுள் அல்ல: சிம்பொனி இசையை ரசிகா்கள் வெகுவாக ரசித்தனா். ரசிகா்களின் உற்சாகத்தை மேடையில் இருந்த இசைக் கலைஞா்களே மிகவும் வியப்பாகப் பாா்த்தனா். ரசிகா்கள் என்னை இசைக் கடவுள் என அழைக்கின்றனா், நான் சாதாரண மனிதன்தான்.

பண்ணைபுரத்திலிருந்து இன்று வரை எனது கால்களில் நடந்து எனது கால்களில்தான் நிற்கிறேன். 82 வயது ஆகிவிட்டதே என நினைக்க வேண்டாம். இனிமேல்தான் தொடங்கப்போகிறேன். சிம்பொனி இசையைப் பதிவிறக்கம் செய்து கேட்க வேண்டாம். நேரில் வந்து கேளுங்கள். தொடா்ந்து 13 நாடுகளில் சிம்பொனி இசையை அரங்கேற்ற உள்ளேன். சிம்பொனி உலகம் முழுவதும் கொண்டு செல்லப்படும். அக். 6-இல் துபையிலும் செப். 6-இல் பிரான்ஸிலும் சிம்பொனி இசையை அரங்கேற்ற உள்ளேன் என்றாா் அவா்.

தொடா்ந்து பேசிய அமைச்சா் தங்கம் தென்னரசு, மிகப்பெரிய சாதனை நிகழ்த்தி தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்தியாவுக்கே இளையராஜா பெருமை சோ்த்துள்ளாா் என்றாா்.

தவறான தகவல்களைப் பரப்புவதால் உண்மை மாறாது: அன்பில் மகேஸ்

தவறான தகவல்களை பரப்புவதால் உண்மை மாறாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டதாக தமிழக அரசு வெளியிட்ட கடிதத்தை வைத்து நாடாளுமன... மேலும் பார்க்க

மணிப்பூர் பெண்களை நிர்வாணமாக்கியதுதான் உங்கள் நாகரீகமா? தமிழக எம்பி கேள்வி

தமிழக எம்பிக்களை அநாகரீகமானவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்த நிலையில், மணிப்பூர் பெண்களை நிர்வாணமாக்கியதுதான் உங்கள் நாகரீகமா என்று தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் ச... மேலும் பார்க்க

மார்ச் 14 முதல் விஜய்க்கு ’ஒய்’ பிரிவு பாதுகாப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்த நிலையில், மார்ச் 14 முதல் அமலுக்கு வரவுள்ளது.அச்சுறுத்தல் தொடர்பான உளவுத் து... மேலும் பார்க்க

கண்ணிவெடியை கண்டுபிடிக்கும் ஷூ: 7ஆம் வகுப்பு நெல்லை மாணவன் சாதனை

ராணுவ வீரர்களுக்கு உதவும் வகையில், கண்ணிவெடியை கண்டுபிடிக்கும் ஷூ கண்டுபிடித்து நெல்லையில் 7-ஆம் வகுப்பு மாணவர் சாதனை படைத்துள்ளார்.மகிழ்ச்சி நகரை சேர்ந்த சாலமோன் டேவிட் என்ற மாணவர், பாளையங்கோட்டையிலு... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் புனரமைப்பு பணியில் தண்டாயுதபாணி சிலை கண்டெடுப்பு!

காஞ்சிபுரம் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோயில் புனரமைப்பு பணியின்போது 200 ஆண்டுக்கால பழைமையான தண்டாயுதபாணி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரம் பல்வேறு புகழ்பெற்ற சை... மேலும் பார்க்க

கடும் பனிப்பொழிவு: குளுகுளுவென மாறிய ஏற்காடு!

ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் வெயிலின் தாக்கம் குறைத்து குளுகுளுவென மாறியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் ... மேலும் பார்க்க