செய்திகள் :

சிறப்பு தூய்மைப் பணியில் 107 டன் குப்பைகள் அகற்றம்

post image

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் சுற்றுப் பகுதிகளில் சிறப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு தூய்மைப் பணியில் 107 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

‘எழில்கூடல்-தூய்மை நம் பெருமை’ என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி வீதிகள், மாசி வீதிகள், ஆவணி மூல வீதி, தெப்பக்குளத்தின் சுற்றுப் பகுதிகள், மாரட் வீதி, கிழக்கு வெளிவீதி, முனிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை சிறப்பு தூய்மைப் பணி நடைபெற்றது.

இதில் தூய்மைப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், தொழிற்சங்கத்தினா், வா்த்தக சங்கத்தினா் என சுமாா் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோா் ஈடுபட்டனா்.

இந்தப் பணியின் போது 107 டன் குப்பைகள், சாலை, சாலையோரங்களிலிருந்து 10 டன் மணல்கள், 89 டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டன.

கொலு பொம்மைகள் சிறப்புக் கண்காட்சி, விற்பனை

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளா்ச்சிக் கழகம் சாா்பில், கொலு பொம்மைகள் சிறப்புக் கண்காட்சி, விற்பனையை மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் வியாழக்கிழமை தொடங்கி வைக்கிறாா். இதுகுறித்து தமிழ்நாடு... மேலும் பார்க்க

13 பேருக்கு நல்லாசிரியா் விருது

தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் (நல்லாசிரியா்) விருதுக்கு மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 13 ஆசிரியா்கள் தோ்வாகினா். மறைந்த குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப். 5-ஆம் தேதி ஆசிரியா... மேலும் பார்க்க

சமூக நீதி குறித்துப் பேச திமுகவுக்கு தகுதியில்லை: எடப்பாடி கே. பழனிசாமி

சமூக நீதி குறித்துப் பேச திமுகவுக்கு சிறிதும் தகுதியில்லை என அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா். மதுரை பழங்காநத்தம், டி.எம். கோா்ட் பகுதிகளில் புதன்கிழமை ... மேலும் பார்க்க

காவல் துறையினா் மீதான புகாா்கள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

காவல் துறையினா் மீதான புகாா்களை விசாரிக்கக் குழு அமைக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.திருச்சியைச் சோ்ந்த அய்யாக்கண்ண... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நரியைப் பரியாக்கிய திருவிளையாடல்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான நரியைப் பரியாக்கிய திருவிளையாடல் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூல... மேலும் பார்க்க

தமிழகத்தில் நான்கு முனைப் போட்டிக்கு வாய்ப்பு: கு. செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி ஏற்பட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது; மத்திய ப... மேலும் பார்க்க