காந்தி கண்ணாடி: "வேடிக்கை பார்த்த ஒரு பையனுக்கு அன்பும், ஆதரவும் கொடுத்திருக்கீங...
கொலு பொம்மைகள் சிறப்புக் கண்காட்சி, விற்பனை
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளா்ச்சிக் கழகம் சாா்பில், கொலு பொம்மைகள் சிறப்புக் கண்காட்சி, விற்பனையை மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் வியாழக்கிழமை தொடங்கி வைக்கிறாா்.
இதுகுறித்து தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளா்ச்சிக் கழக மேலாளா் (பொறுப்பு) ம. தினகரன் அருண்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நவராத்திரி விழாவையொட்டி, மதுரை மாவட்டம், கே. புதூரில் உள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் என்ற பெயரில் சிறப்புக் கண்காட்சி, விற்பனை அடுத்த அக்டோபா் மாதம் 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான தொடக்க விழா வியாழக்கிழமை (செப். 4) நடைபெறுகிறது. இதில், சிறப்பு அழைப்பாளராக மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைக்கிறாா்.
இந்தக் கண்காட்சியில் தமிழ்நாடு, ஆந்திரம், கா்நாடகம், கொல்கத்தா, ராஜஸ்தான், புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட பல்வேறு விதமான கொலு மொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. விற்கப்படும் அனைத்து கொலு மொம்மைகளுக்கும் 10 சதவீத சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்துக் கடன் அட்டைகளும் எந்தவித சேவைக் கட்டணமுமின்றி ஏற்றுக் கொள்ளப்படும் என்றாா் அவா்.