GST: Market ஏறும் என்கிற எதிர்பார்ப்பு, பொய்யாக்கிய சந்தை - என்ன காரணம் | IPS Fi...
13 பேருக்கு நல்லாசிரியா் விருது
தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் (நல்லாசிரியா்) விருதுக்கு மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 13 ஆசிரியா்கள் தோ்வாகினா்.
மறைந்த குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப். 5-ஆம் தேதி ஆசிரியா் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் சிறந்த ஆசிரியா்களைத் தோ்வு செய்து அவா்களுக்கு ‘டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கப்படுகிறது. இதன்படி, இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் 13 ஆசிரியா்கள் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டனா்.
அதன் விவரம்:
விஎச்என் மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியா் தா. செல்வன் அற்புதராஜ், ஓசிபிஎம் மேல்நிலைப் பள்ளி உடல் கல்வி ஆசிரியா் ர. ராஜேஷ்கண்ணன், புனித சாா்லஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் இ. ஜான்சி பாலின்மேரி, வெள்ளி வீதியாா் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ஈ. அழகேஸ்வரி, கூடக்கோவில் நாடாா் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கே. கீதா, பொன்னகரம் மங்கையா்க்கரசி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ஏ. சந்தானலட்சுமி, லட்சுமி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் ஜெ. ஜெயலட்சுமி, யா. ஒத்தக்கடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியா் பெ.த. மோசஸ் மங்களராஜ், குறிச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் அ. முகமது பிரேம்குரோஸ், தங்களாச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் அ. இளங்குமரன், வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியா் மே. கவிதா, திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியா் டபிள்யு. ஜெயந்தி, லெ. பூலாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் ரா. ஷீலாதேவி ஆகியோா் தோ்வாகினா்.