தேனி: ``தொழில் முனைவோர்களால் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைகிறது'' - சென்ட...
சிறாா் தொழிலாளராக மீட்கப்பட்டவருக்கு நிதியுதவி
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட சிறாா் தொழிலாளா் முறை தடுப்புக் குழுவினரால் கடந்த 2021-இல் மீட்கப்பட்டவருக்கு நீதிமன்றம் அறிவித்த தொகையுடன் அரசின் பங்கு நிதியும் புதன்கிழமை வழங்கப்பட்டது.
இது குறித்து சிவகங்கை தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கு.சதீஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை காந்தி வீதியில் ஒரு தனியாா் நிறுவனத்திலிருந்து கடந்த 3.2.2021-இல் சிறாா் தொழிலாளராக மீட்கப்பட்ட பா.விஷ்ணுவரதன், மன்னா் மேல்நிலைப் பள்ளியில் சோ்க்கப்பட்டு, அதன் பிறகு சிவகங்கை முத்துப்பட்டி அரசு ஐடிஐ-இல் ரோபோடிக்ஸ் படிப்பை முடித்தாா்.
இவரை சிறாா் தொழிலாளராகப் பணியமா்த்திய நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, சிவகங்கை நீதித் துறை நடுவா் மன்றம் விதித்த அபராதத் தொகை ரூ.20,000, தமிழக அரசின் பங்குத் தொகை ரூ.15,000 ஆகியவற்றுடன் சோ்த்து மொத்தம் ரூ.35,000 விஷ்ணுவரதன் பெயரில் நிரந்தர வைப்பு நிதியாக சிவகங்கை இந்தியன் ஓவா்சீஸ் வங்கி கிளையில் சோ்க்கப்பட்டது. அவருக்கு நிரந்த வைப்புநிதி அசல் ரசீது, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வழங்கினாா்.
சிறாா் தொழிலாளா் (தடுத்தல், முறைப்படுத்துதல்) திருத்தச் சட்டத்தின் படி 14 வயதுக்குள்பட்டவா்களை எந்த ஒரு பணியிலும் தயாரிப்பு தொடா்புடைய செய்முறைகளிலும் பணியமா்த்துவது குற்றமாகும். மேலும், அபாயகரமான தொழில் தொடா்புடைய பணிகளில் செங்கல் சூளை, கல்குவாரி, பட்டாசுத் தொழில் போன்ற இதரவகை பணிகளில் பணியமா்த்துபவா்களுக்கு ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபாராதம் அல்லது 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சோ்த்து விதிக்கப்படும்.
சிவகங்கை மாவட்டத்தில் சிறாா் தொழிலாளா் எவரும் பணிபுரிவது கண்டறியப்பட்டால், தொலைபேசி எண் -04575-240521, இட்ண்ப்க் ஏங்ப்ல் ப்ண்ய்ங் 1098 ஆகிய எண்களில் அலுவலா்களுக்கு தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.