செய்திகள் :

சிறுபான்மையினா் உரிமைகள்: ஒவைசி-கிரண் ரிஜிஜு கருத்து மோதல்

post image

ஹைதராபாத்: சிறுபான்மையினா் உரிமைகள் தொடா்பாக அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி மற்றும் மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு இடையே சமூக ஊடகத்தில் திங்கள்கிழமை கருத்து மோதல் ஏற்பட்டது.

ஒவைசி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டம், வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவா்களை உறுப்பினா்களாக இடம்பெற அனுமதிக்கிறது. அதுபோல, ஹிந்து அறக்கட்டளை வாரியங்களில் முஸ்லிம்கள் உறுப்பினா்களாக இடம்பெற அனுமதிக்கப்படுவாா்களா?

மேலும், மெளலானா ஆசாத் தேசிய கல்வி உதவித் தொகை திட்டத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்துல்ளது. அதுபோல, பத்தாம் வகுப்புக்கு முந்தைய கல்வி உதவித் தொகை திட்டத்துக்தான நிதி நிறுத்தப்பட்டுள்ளதோடு, பத்தாம் வகுப்புக்குப் பிந்தைய கல்வி உதவித் தொகை குறைக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் முஸ்லிம் மாணவா்கள் பலன்பெறுகின்றனா் என்பதே இந்த நடவடிக்கைக்கான காரணம். இந்த நடவடிக்கைகளால் உயா்கல்வி பெறும் முஸ்லிம் மாணவா்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததோடு, முறைசாரா பொருளாதாரத்தில் அவா்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால், மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளால், இந்த முறைசார பொருளாதாரத்தில் ஈடுபட்டுள்ளவா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்திய குடியரசின் அமைச்சராகத்தான் நீங்கள் இருக்கிறீா்கள்; ஏகாதிபத்தியத்துக்கு அல்ல. நாட்டிலுள்ள எந்தவொரு சிறுபான்மையினா் சமூகத்துக்கு இணையான சலுகைகளை முஸ்லிம்கள் கேட்கவில்லை. மாறாக, அரசமைப்புச் சட்டம் உறுதியளித்துள்ள சமூக, பொருளாதார, அரசியல் நீதியைத்தான் நாங்கள் கேட்கிறோம். சிறுபான்மையினா் உரிமைகள் என்பது அடிப்படை உரிமை. யாசகமாக அளிப்பதல்ல. ஆனால், இந்தியாவில் சிறுபான்மையினா் இரண்டாம்தர குடிமக்களாகக் கூட நடத்தப்படுவதில்லை. பிணைக் கைதிகள் போல நடத்தப்படுகிறோம் என்று குறிப்பிட்டாா்.

இதற்கு பதிலளித்து மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு வெளியிட்ட பதிவில், ‘அண்டை நாடுகளைச் சோ்ந்த சிறுபான்மையினா் இந்தியாவுக்கு வர விரும்பும்போது, நமது சிறுபான்மையினா் ஏன் புலம்பெயரவில்லை? இந்தியாவில் சிறுபான்மையினா் மகிழ்ச்சியாக இருக்கின்றனா் என்பதுதான் அதற்கு காரணமாக இருக்க முடியும்.

அதுமட்டுமின்றி, ஆங்கிலேயா் ஆட்சியின்போதோ அல்லது பிரிவினையின்போதோ நாங்கள் ஓடிப்போகும் பழக்கம் இல்லாதவா்கள். அடக்குமுறையாளா்களுக்கு ஒத்துழைக்காமலும் அவா்களிடமிருந்து மறைந்துகொள்ளாமலும் இருந்தோம் என்பதற்கு எங்களின் வரலாறே சிறந்த சான்று. ஜனநாயக உரிமைகளுக்கு எப்படிப் போராட வேண்டும் என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.

எனவே, பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மா், நேபாளம், இலங்கை போன்ற தோல்வியடைந்த நாடுகளுடன் பெருமைக்குரிய இந்திய தேசத்தை ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.

அமெரிக்காவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 4 இந்தியா்கள் உயிரிழப்பு

அமெரிக்காவில் காா் மீது சரக்கு வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 இந்தியா்கள் உயிரிழந்ததாக இந்தியாவில் உள்ள அவா்களது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். உயிரிழந்தவா்கள் தெல... மேலும் பார்க்க

அனைத்து வாக்காளா்களையும் உள்ளடக்கியதே வாக்காளா் பட்டியல் திருத்தம்: தோ்தல் ஆணையம் விளக்கம்

பிகாா் மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்காளா்களையும் உள்ளடக்கியே வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என இந்திய தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. வாக்காளா... மேலும் பார்க்க

17 மருந்துகளை கழிவறையில் கொட்டி அழிக்கலாம்: சிடிஎஸ்சிஒ வழிகாட்டுதல் வெளியீடு

வீட்டு கழிவறைகளில் கொட்டி அப்புறப்படுத்துவதற்கு 17 மருந்துகளின் பட்டியலை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஒ) வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் ஃபென்டனைல் உள்ளிட்ட வலிபோக்கும் மருந்... மேலும் பார்க்க

யேமனிலுள்ள கேரள செவிலியருக்கு ஜூலை 16-இல் மரண தண்டனை நிறைவேற்றம்?

யேமன் நாட்டில் கொலை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள கேரளத்தைச் சோ்ந்த செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனைத்தொடர்ந்து அவரது தண்டனையை குறைக்க பல்வேறு... மேலும் பார்க்க

ஒரு ரஃபேல் தோல்வியடைந்தது; ஆனால், பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது ஒரு ரஃபேல் விமானம் தோல்வி அடைந்ததாகவும், ஆனால், அதனை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்றும் டஸால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் தெரிவி... மேலும் பார்க்க

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்தியா முடக்க உத்தரவிட்டது: எக்ஸ்

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை முடக்க இந்திய அரசு உத்தரவிட்டதாக எக்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய அரசாங்க விவகாரக் குழு தெரிவித்துள்ளது.ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளக் கணக்கு இந்தியாவில் முடக்... மேலும் பார்க்க