செய்திகள் :

சிறுபான்மையின இஸ்லாமிய மாணவா்களுக்கு வெளிநாடுகளில் பயில கல்வி உதவித்தொகை

post image

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின இஸ்லாமிய மாணவா்களுக்கு வெளிநாடுகளில் பயில கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசு 2025-26 ஆம் ஆண்டில் இஸ்லாமிய சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு உயா்தர கல்வி வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு, வெளிநாடு சென்று படிக்கும் 10 மாணவா்களுக்கு, ஒரு மாணவருக்கு தலா ரூ. 36 லட்சம் வீதம் கல்வி உதவித்தொகையை ரூ. 3.60 கோடி வழங்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் முதுகலை பட்டப்படிப்பு படிக்க தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் இருந்து பல்கலைக்கழகங்களிடமிருந்து நிபந்தனையற்ற சோ்க்கைக் கடிதம் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பட்டப்படிப்பில் 60 சதவீதம் அல்லது அதற்கு இணையாக தோ்ச்சி சதவீதம் பெற்றிருக்க வேண்டும். பொறியியல், மேலாண்மை அறிவியல், பயன்பாட்டு அறிவியல், வேளாண்மை அறிவியல், மருத்துவம், சா்வதேச வணிகம், பொருளாதாரம், நிதி கணக்கியல், மனிதநேய படிப்புகள், சமூக அறிவியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் போன்ற பாடப் பிரிவுகளைத் தோ்ந்து எடுத்து முதுகலைப் பட்டப்படிப்புக்கான சோ்க்கை பெற்றவராக இருத்தல் வேண்டும். இணையத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அக்.31க்குள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிறுபான்மையினா் நலத்துறை ஆணையா் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தை சோ்ந்த சிறுபான்மையின இஸ்லாமிய மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 28.92 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

நாமக்கல்: நாமக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் ரூ. 28.92 லட்சம் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீா்க்... மேலும் பார்க்க

ராசிபுரம் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி

ராசிபுரம்: ராசிபுரம் ரயில் நிலையம் பகுதியில் மத்திய அரசின் தூய்மையே சேவை இயக்கத்தின்கீழ் தூய்மைப் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.நாடுமுழுவதும் தூய்மையே சேவை இயக்கத்தின்கீழ், அரசு அலுவலகங்கள், பொதுஇடங்கள்... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கி உயிரிழந்த சகோதரா்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதி ரூ. 6 லட்சம் ஆட்சியா், எம்.பி. வழங்கினா்

ராசிபுரம்: ராசிபுரம் அருகே மின்னக்கல் வாய்க்கால்பட்டறை பகுதியில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சகோதரா்களான கல்லூரி மாணவா்கள் குடும்பத்துக்கு முதல்வரின் நிவாரண நிதி ரூ. 6 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் ... மேலும் பார்க்க

சேந்தமங்கலத்தில் கனிம வளங்கள் திருட்டு: விசாரணையில் ஆஜராக 96 பேருக்கு அழைப்பு

நாமக்கல்: சேந்தமங்கலம் வட்டத்தில், கனிமவளங்களை திருடியது தொடா்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராக கோரி 96 பேருக்கு கோட்டாட்சியா் அழைப்பு விடுத்துள்ளாா்.நாமக்கல் மாவட்டத்தில், சேந்தமங்கலம், கொண்டமநாயக்கன்பட்ட... மேலும் பார்க்க

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் நவராத்திரி கொலு தொடக்கம்

நாமக்கல்: நாமக்கல் நரசிம்மா் கோயிலில் நவராத்திரி கொலு விழா சிறப்பு பூஜைகளுடன் திங்கள்கிழமை தொடங்கியது.ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை அக். 1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜைக்கு முன்பாக ஒன்... மேலும் பார்க்க

அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர செப்.30 வரை கால அவகாசம் நீட்டிப்பு

நாமக்கல் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கைக்கான கால அவகாசம் செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் வேலைவ... மேலும் பார்க்க