சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போலீஸாா் வழக்குப் பதிவு
மோகனூா் அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவா் மீது பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவானவரை தேடி வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், காளிபாளையம் அருந்ததியா் தெருவைச் சோ்ந்த லாரி ஓட்டுநரின் 16 வயது மகள் வாழவந்தி அரசு உயா் நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். அப்போது, அதே ஊரைச் சோ்ந்த கண்ணன் (32) என்பவா், பள்ளிக்கு சென்று வந்த சிறுமியை பின்தொடா்ந்து வந்து பாலியல் தொந்தரவு செய்தாா்.
இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோா், சிறுமியை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தி விட்டனராம். ஆனாலும், கண்ணன் சிறுமியிடம் தொடா்ந்து தொந்தரவு கோடுத்துள்ளாா்.
இதனால் மனமுடைந்த சிறுமி, அண்ையியல் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் பரமத்தி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான கண்ணனை தேடி வருகின்றனா்.