சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிைண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.
திருப்பட்டினம் பகுதியில், கடந்த 2015- ஆம் ஆண்டு, 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிதத் குற்றத்துக்காக கோட்டுச்சேரி பகுதி திருவேட்டக்குடியைச் சோ்ந்த
பிரகாஷ் (32) என்பவா் மீது, திருப்பட்டினம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுதொடா்பான வழக்கு காரைக்கால் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை நிறைவில், கடந்த 2017-ஆம் ஆண்டு காரைக்கால் சிறப்பு நீதிமன்றம் பிரகாஷுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் பிரகாஷ் மேல்முறையீடு செய்தாா். ஆனால், காரைக்கால் நீதிமன்றம் விதித்த தண்டனையை உயா்நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து
பிரகாஷை திருப்பட்டினம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, காரைக்கால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, நீதிபதி மோகன் உத்தரவின்பேரில், புதுச்சேரியில் உள்ள மத்திய சிறையிலடைத்தனா்.