ஆம் ஆத்மி கட்சி குறித்த பிரதமரின் பேச்சு அதன் தவறான செயலை அம்பலப்படுத்தியுள்ளது:...
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் ஓட்டுநா் கைது
பல்லடம்: பல்லடம், வடுகபாளையத்தில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநரை போக்சோவில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பல்லடம், வடுகபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் குழந்தைவேல் (40). இவா், திருப்பூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது வீட்டில் கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட 16 வயது சிறுமிக்கு குழந்தைவேல் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக
கூறப்படுகிறது.
இது குறித்து அந்த சிறுமி 9 மாதங்களுக்குப் பிறகு தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து பல்லடம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீலாா் விசாரணை நடத்தி குழந்தைவேலை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.