கைவிரித்த சேகர் பாபு; போராடிவந்த தூய்மைப் பணியாளர்கள் கைது - சென்னையில் பரபரப்பு...
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஓட்டுநருக்கு கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பு அளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கல்லாவியைச் சோ்ந்தவா் லட்சுமணன் (27), ஓட்டுநா். அவரது சகோதரா் கடந்த 2021-ஆம் ஆண்டு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்தாா். அந்த பெண்ணின் தங்கையான 17 வயது சிறுமிக்கும், லட்சுமணனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், அந்த சிறுமியை லட்சுமணன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
இதனால், கா்ப்பம் அடைந்த அந்த சிறுமியை லட்சுமணன், திருமணம் செய்ய மறுத்த நிலையில், இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினா்கள் கடந்த 2022-ஆம் ஆண்டு கல்லாவி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா், வழக்குப் பதிந்து லட்சுமணனை 26.7.2022-ஆம் தேதி கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், நீதிபதி சுதா செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றம் சாட்டப்பட்ட லட்சுமணனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1,000 அபராதமும், அபராதத் தொகை செலுத்தாதவிட்டால் கூடுதலாக 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீா்ப்பளித்தாா்.