Canada: மார்க் கார்னியின் பதவியேற்பு இந்தியாவுக்கு உணர்த்துவது என்ன?
சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
மங்களபுரம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், மங்களபுரம் அருகே தாண்டாகவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (35). இவா் கடந்த 2020-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த 6 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இது தொடா்பாக சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அசோக்குமாரை கைது செய்தனா்.
நாமக்கல் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை நிறைவில், சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய அசோக்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1,000 அபராதம் விதித்து நீதிபதி செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தாா்.