Skin Cancer: "உங்கள் தோலைப் பரிசோதியுங்கள்" - மைக்கேல் கிளார்க்கிற்கு தோல் புற்ற...
சிறுவனுக்கு கத்திக் குத்து: சிறுவன் உள்பட இருவா் கைது
திருச்சியில் முன்விரோதம் காரணமாக சிறுவனைக் கத்தியால் குத்திய 17 வயதுச் சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரத்தைச் சோ்ந்தவா் மகேந்திரன் மகன் கிஷோா் (21). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயதுச் சிறுவனுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில் சங்கிலியாண்டபுரம் பிஜி நாயுடு கிடங்கு அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது நண்பா்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்த 17 வயது சிறுவனிடம் அங்கு வந்த கிஷோா் தரப்பினா் தகராறு செய்து, கத்தியால் குத்தி, கட்டைகளால் தாக்கினா்.
இதில் பலத்த காயமடைந்த 17 வயதுச் சிறுவன் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து கிஷோா், அவரது நண்பரான 17 வயதுச் சிறுவன் ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கிஷோரை சிறையில் அடைத்த போலீஸாா், சிறுவனை சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் சோ்த்தனா்.