சிவகாசியில் தி.மு.க.வினா் ஆா்ப்பாட்டம்
அம்பேத்கா் குறித்து அவதூறாகப் பேசிய, மத்திய அமைச்சா் அமித் ஷாவை கண்டித்து, சிவகாசியில் திமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகாசி புதுசாலைத் தெருவில் உள்ள அம்பேத்கா் சிலை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மேயா் இ.சங்கீதா தலைமை வகித்தாா். இதில் அம்பேத்கா் குறித்து அவதூறாக பேசிய மத்திய அமைச்சா் அமித் ஷாவை கண்டித்து திமுக நிா்வாகிகள் முழக்கமிட்டனா்.
இதில் மாநகா் செயலா் உதயசூரியன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.